கடற்கரை தூய்மைப் பணி

கடலோடு நீங்கள் பேசியது உண்டா?மனதிற்கு நிறைவை தருவது எது? நாம் நம் குடும்பத்திற்காக ஒரு நாளை மகிழ்வோடு கொண்டாடுவது.

ஆனால், அதை விட மன நிறைவை தருவது உலகத்திற்காக, சுற்றுப்புறச் சூழலுக்காக ஒரு நாளை செலவிடுவது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி தான் "கடற்கரையை தூய்மை" செய்யும் நிகழ்ச்சி.

நாள்தோறும் மனிதன் வீசி எறியும் மறுசுழற்சி ஆகா குப்பைகளை தங்களின் வயிற்றுக்குள்ளிருந்து பிரித்தெடுத்து கடல் அலைகள் வெளியே கொப்பளித்து துப்பியவாறே உள்ளன. ஆனால் மனித பயன்பாட்டின் நவீன எச்சங்கள் கடற்கரையின் நீங்கா கறைகளாக ஆங்காங்கே மணலில் மருக்களாய், மணற்மேடுகளாய் குவிந்த வண்ணம் உள்ளன.

Gallery View

Explore by Year

தமிழ் மொழி விழா

உலகில் எங்கும் காண முடியாத சிறப்பு வாய்ந்த விழாவாக தாய் மொழிக்காக சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நிகழ்ச்சி தான் தமிழ் மொழி விழா. அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு சிங்கப்பூர் ஆண்டுதோறும் இதில் பங்கு பெற்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நம் குழுவின் நிகழ்ச்சி தீவு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களாலும், மாணவர்களாலும் வரவேற்பை பெற்று தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது.

Gallery View

Explore by Year

அழகப்பர் குடும்ப தின விழா

ஆண்டுதோறும் நம் குழுவின் உறுப்பினர்களுக்காக நாம் கொண்டாடும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நமது குழுவினரின் குடும்பத்தில் உள்ள பல திறமைசாலிகளின் படைப்பாற்றலை மேடையேற்றவும் தனி கவனம் செலுத்தப்படுகிறது. பாடும் கலை, ஓவியக் கலை என நம் குழுவிலுள்ள குடும்பத்தினரின் பன்முகங்கள் வெளிப்படும் மேடையாக நம் குடும்பவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நண்பர்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சியாக அழகப்பர் குடும்ப தின விழா கொண்டாடப் படுகிறது.

Gallery View

Explore by Year

சிறப்பு நிகழ்ச்சிகள்

அழகப்பா கல்வி நிலைய குழு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. இதில் உறுப்பினர்களும் மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

Gallery View

Explore by Year